Ticker

6/recent/ticker-posts

ஆணுக்குள் பெண் - ஸ்கேன் ரிப்போர்டில் அதிர்ந்த மருத்துவர்கள். He is intersex

ஆணுக்குள் பெண் - ஸ்கேன் ரிப்போர்டில் அதிர்ந்த மருத்துவர்கள். He is intersex 



20 வருடங்களாக சிறுநீரக சிக்கல் இருந்ததால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த இளைஞருக்கு பரிசோதனையின் போது பெண் பாலின உறுப்புக்கள் இருந்ததை கண்டு ஆச்சிர்யத்தில் மூழ்கி போனார்கள் மருத்துவர்கள். 


33 வயதுடைய சென் லி, இவர் சீனா நாட்டை சேர்ந்தவர். ஸ்கேன் செய்த போது அவருக்கு பெண் பாலினத்தின் க்ரோமோசோம்கள் உடலில் உள்ளதாகவும். தனக்கு கரு முட்டை  மற்றும் கருப்பை இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர், ​​​​இதை கண்டுபிடித்த மருத்துவர்களும், சென் லியூம் மிகவும் அதிர்ந்துபோனார்கள். இவ்வளவு நாள் அவர் அனுபவித்தது சிறுநீரக பிரச்சினை இல்லை அது மாதவிடாய் என்று கூறப்பட்டுள்ளது.  



20 வருடங்களாக தனது சிறுநீரில் இரதம் வெளியேறுவதும் வயிற்று வலியுமாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த மருத்துவ பரிசோதனையின் போது தான் அவரின் நோய்க்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண் பாலினத்தின் க்ரோமோசோம்கள் உடலில் இருந்ததால் அவருக்கு மாதவிடாய் ஏட்பட்டுள்ளது. 


இந்த அரிதான மருத்துவத்தன்மை கொண்டவர்களுக்கு அவர்களின் பாலினம் மட்டுமல்லாது எதிர் பாலினத்தின் க்ரோமோசோம்கள் மற்றும் உறுப்புகளும் இருக்குமாம்.


இதன்பின்னர், தனது உடலில் உள்ள பெண் உறுப்புகளை அகற்றுமாறு மருத்துவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் அந்த இளைஞர்.



33 ஆண்டுகளுக்குப் பிறகு, தனக்குள் இருக்கும் வித்தியாசமான இந்த பிரச்சினையை கண்டறிந்த சென் லீ , சீனாவில் உள்ள பிறப்புறுப்பு அறுவைசிகிச்சைகளில் தலை சிறந்த மருத்துவமனையான 

குவாங்சோ மருத்துவமனைக்குச் சென்று தனது பெண்பாலின உறுப்புகளை அகற்றும் சத்திரசிகிச்சையை ஜூன் 6ம் திகதி மேட்கொண்டார். சுமார் மூண்டு மணி நேரம்  சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் இளைஞரின்  உடலில் இருந்த கருமுட்டை மற்றும் கருப்பை ஆகியவற்றை நீக்கியிருக்கிறார்கள்.


மேலும், 10 நாள் சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த சிகிச்சை காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம் எனத் தெரிவித்திருக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து அந்த இளைஞருக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.


மேலும் இது போன்று  உள்ளவர்களை "ஹெர்மாஃப்ரோடைட்"  என்று அழைத்துள்ளனர். பொதுவாக முதுகெலும்பு இல்லாத விலங்குகள் மற்றும் ஒட்டுன்னிகளை அழைக்கும் ஒரு சொல்லாக இது இருந்தது, அதனால், அவர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதால் அந்த வார்த்தையை தற்போது பயன்படுத்துவதில்லை.  


இதை குறித்து நிபுணர்கள், ஒவ்வொரு 2000 வருடங்களுக்கு ஒரு முறையும் 200 பிறப்புக்களில் மூன்று பேர் இவ்வாறு பிறக்கலாம்  என்று கூறியுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்