Ticker

6/recent/ticker-posts

மூன்று மாம்பழங்களை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்த இலங்கை தமிழர் - காரணம் தெரியுமா?

மூன்று மாம்பழங்களை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்த இலங்கை தமிழர் - காரணம் தெரியுமா?


மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலையை 10 லட்சம் ரூபா கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ள சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது. 



ஏலம் ஒரு பெறுமதியான பொருள் அல்லது யாரவது ஒரு பிரபலம் பாவித்த பொருட்கள் அப்படி இல்லனா ஒரு கலைபடைப்பு இது எல்லாமே எடுப்பாங்க அதுக்கு நிறையவே காசு கொடுப்பாங்க. இப்போ ipl ல பிளயர்ஸ் ஏலம் எடுக்குறாங்க. 


வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார திருவிழா உற்சவம் நடைபெற்று வருகின்றது.


இதன்படி, இந்த திருவிழா உற்சவத்தின் விசேட பூஜைகள் நேற்றைய தினம் நடைபெற்றன.


இதன்போது, விநாயகருக்கு மாம்பழங்கள் மற்றும் மாலை அணிவித்து, விசேட பூஜைகள் நடைபெற்றன. இதன் போது விநாயகருக்கு பூஜை செய்யப்பட்ட மாலைகளும் பலன்களும் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மாம்பழத்தையும் மாலையையும் தான் இந்த ஏலத்தில் 10 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுக்கட்டுள்ளது. 

குறிப்பாக இந்த விழாவில் வெளிநாடுகளை இருந்த வருகின்ற பலரும் கலந்து கொள்வார்கள் என் தெரிவிக்கப்படுகிறது. 


இதன்போது, குறித்த மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபா வரை ஏலத்தில் கோரப்பட்டுள்ளது.


இந்த நிலையில், கணேசபுரம் பகுதியில் வசிக்கும் மோகன் குமார் குடும்பம் இறுதியாக 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தை கோரியுள்ளனர்.


இவ்வாறான நிலையில், குறித்த மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 10 லட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


10 லட்சம் ரூபாவிற்கு மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியவற்றை ஏலத்தில் பெற்றுக்கொண்ட மோகன்குமார் கூறுகையில்,



''வவுனியா மாவட்டம், கணேசபுரம் - சித்திவிநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு மாம்பழங்கள் படைக்கப்பட்டன. மாம்பழங்கள் விநாயகருக்கு மிகவும் பிடித்தது. அப்படி விநாயகருக்கு அர்ச்சனைக்காக வைக்கப்பட்ட அந்த மாம்பழங்களை ஏலத்தில் வைத்தார்கள். மூலஸ்தானத்தில் வைத்து, பிறகு எடுத்து எழுந்தருளிய பிள்ளையாரிடம் வைத்தார்கள். எழுந்தருளி பிள்ளையார் கோவிலை சுற்றி வந்ததன் பிறகு, பிள்ளையாருக்கு அணிவித்த பெரிய ஆண்டாள் மாலையொன்றும், இந்த மூன்று மாம்பழத்தையும் ஏலத்தில் விட்டார்கள்.


இந்த ஏலத்தில் ஏற்கனவே மூன்று நான்கு  பேர் போட்டி போட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த சமயம் கோவிலுக்கு போயிருந்தோம். இந்த கோவில் பிள்ளையார் மாம்பழத்தில் பிரசித்தி பெற்றவர் தானே என் கூறி ஏலத்தை கேளுங்கள் என குடும்பத்தவர்கள் கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் அங்கு போன போது 2 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் போய் போய்க்கொண்டிருந்தது, இந்தளவிற்கு கேட்க முடியாது என்றேன். கோவிலுக்கு ஒரு நேர்த்தி வைத்திருந்தோம். அதனால், அந்த நேர்த்தியுடன் கேளுங்கள் என குடும்பத்தார் கூறினார்கள். அதன் பிறகு கேட்டோம். இறுதியாக 9 லட்சத்து 70 ஆயிரம் வரை கேட்கப்பட்டது. நாங்கள் 10 லட்சம் ரூபாவிற்கு கேட்டோம். 10 லட்சம் ரூபாவோடு ஏலம் நிறைவு பெற்றது. பிள்ளையாரின் அருள் எங்களுக்கு கிடைத்தது." என அவர் கூறினார்.



அவ்வாறு ஏலத்தில் பெற்றுக்கொண்ட மாம்பலத்தில் ஒன்டாரி அங்கே கோவில் வளாகத்தில் உள்ள பக்த்தர்களுக்கு பகிர்ந்து கொடுத்ததாகவும். மீதி இரண்டு மாம்பழங்களை வீட்டிற்குஎடுத்து சென்று பூஜா அறையில் வைத்து விட்டு ஒப்பின்னர் நானும் என் குடும்பத்தாரும் சாப்பிட்டதாகவும். அந்த மாம்பழங்கள் விதைகளை தோட்டத்து காணியில் விதைதாகவும் கூறியுள்ளார். 

மேலும் இது போன்ற சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள்...


ஐ போன் 14 - ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்.

பிக் பாஸ் புகழ் நடிகை மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்.

ஒரு வாழைப்பழம் $120000 டாலர் - வாழைப்பழ கலைஞ்சர் மீது வழக்கு பதிவு...


கருத்துரையிடுக

0 கருத்துகள்