Ticker

6/recent/ticker-posts

ஒரு வாழைப்பழம் $120000 டாலர் - வாழைப்பழ கலைஞ்சர் மீது வழக்கு பதிவு...

ஒரு வாழைப்பழம் $120000 டாலர் - வாழைப்பழ கலைஞ்சர் மீது வழக்கு பதிவு...


ஒரே ஒரு வாழைப்பழம்  $120000 டாலருக்கு விற்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?   



மொரிசியோ கட்டலேன் (Maurizio Cattelan) இந்த பெயரை சிலர் கேள்வி பட்டிருக்கலாம். இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு பிரபலமான ஓவியர். இவரின் ஓவியம் கொஞ்சம் இல்லங்க ரொம்பவே முரண்பாடாக இருக்கும். 


இவர் எவ்வளோ முரண்பாடானவர் என்றால் -  ஒரு பிரேஸி காலை கண்காட்சிக்கு உயிருள்ள கழுதையை கொண்டு வந்தவர். இதுல இருந்தே தெரிஞ்சிருக்கும் இவர் எப்படி பட்டவர்னு. 


கடந்த 2021 ஆம் ஆண்டு இவரின் பெயர் பட்டி தொட்டி எல்லாம் பரவி இருந்தது. அதுக்கு காரணம் இவர் செய்த ஒரு செயல். அதாங்க ஒரு ஒற்றை வாழைப்பழத்தை $120000 டாலருக்கு விட்பனை செய்துள்ளார். இந்திய மதிப்பின் படி சுமார் 95 லட்சம். 


காமெடியன்

2019 ஆர்ட் பசேல் என்ற ஒரு கண்காட்சியில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை டேப்பை போட்டு சுவற்றில் ஒட்டி வைத்தார். இதுதான் இவரின் காலை படைப்பு. அதோடு விடவில்லை இந்த காலை படைப்பின் விலை $120000  டாலர் என்றும் அறிவித்துவிட்டார். 



இந்த கலைப்படைப்பின் பெயர் " காமெடியன்" 


மளிகை கடையில் வாங்கிய ஒரு வாழைப்பழம் 95 லட்சத்துக்கு விட்பனை செய்யப்பட்டது. "அந்த படைப்பு காமெடியன் இல்லை அதை அவளை விலை கொடுத்து வாங்கினார் அவர் தன உண்மையான காமெடியன்."


இந்த பழுத்த வாழைப்பழத்தினை நியூயார்க்கினை சேர்ந்த கலைஞர் டேவ் டட்டுனா சாப்பிட்டு விட்டார் என்பது மற்றொரு சர்ச்சை. இதனால் கேலரி அதிகாரிகள் மற்றும் பி ஆர் அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஒற்றை வாழைப்பழம் அந்த காலகட்டத்தில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது.


இது மட்டும் இல்லங்க... 



வழக்கு பதிவு

இப்படி டேப்பை போட்டு ஒட்டியது என்னோட  ஐடியா  என்றும் அதை தான் மொரிசியோ காப்பி  அடித்துவிட்டார் என்றும் மொரிசியோ  மீது இன்னுமொரு கலைஞ்சர் வழக்கும் பதிவு செய்துள்ளார்.


அதாவது 2000மாம் ஆண்டில் அவர் இதே போன்று ஆரஞ்சு பலத்தை காட்சிப்படுத்தியதாகவும் இப்பொது இந்த வாழைப்பழ காட்சிப்படுத்தல் அதே போல் உள்ளது எனவும் அதனால் அது எனது ஐடியா என்றும் அவர் கூறியுள்ளார். 


இதை கேட்ட நீதிபதி "இதை ஒரு கலையாக கருத முடியாது என்று கூறிவிட்டார். அதுமட்டுமல்ல இதெல்லாம் ஒரு ஐடியா தான் ஐடியா கு யாரும் பதிப்புரிமை பெற முடியாது என்றும் இது ஒரு கலை இல்லை என்றும் கூறிவிட்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்