Ticker

6/recent/ticker-posts

பிக் பாஸ் புகழ் நடிகை மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்.

பிக் பாஸ் புகழ் நடிகை மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம். 

நடிகை சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!




பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். பல உலக நாடுகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியாவிலும் ஹிந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளிலும் மிகவும் பிரபலமான ஷோ ஆக உள்ளது பிக் பாஸ். 


யாரென்றே தெரியாத பல முகங்களை மக்களுக்கு கொண்டு சென்று அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுக்கும் ஒரு ஷோ ஆக பிக் பாஸ் உள்ளது. 



ஹிந்தி  பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் தான் சோனாலி போகத். இவர் 14வது சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தவர். இவர் 41 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் ஹிந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 



இவர் சினிமா மட்டும்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அரியானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் சோனாலி போகத்.


நடிகை சோனாலி போகத்தின் கணவர் கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இந்த தம்பதிக்கு யஷோதரா போகத் என்ற மகள் உள்ளார். கணவர் இறந்துவிட்டதால் மகளுடன் சோனாலி போகத் தனியாக வசித்து வந்தார்.



இந்நிலையில் வேலை விஷயமாக நடிகை சோனாலி கோவாவுக்கு சென்றிருந்தார். நேற்றிரவு திடீரென்று சோனாலி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அனைவரும் சோனாலியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்