Ticker

6/recent/ticker-posts

1000 கோடி சம்பளம் கேட்ட நடிகர் - ஆடிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

 1000 கோடி சம்பளம் கேட்ட நடிகர் - ஆடிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.



மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். பல மொழிகளிலும் பல நாடுகளிலும் ஒளிபரப்படுகின்ற ஒரே நிகழ்ச்சி அது பிக்பாஸ் தான். அதுமட்டுமல்ல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி வெரலெவேல்  ஹிட்டடித்துள்ளது. 


தமிழிலும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது பிக்பாஸ். தமிழ் பிக்பாஸை முதலில் கமல் தொகுத்து வழங்க அவருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அடுத்ததாக சிம்பு தொகுத்து வழங்கினார். தற்போது மீண்டும் கமலே பிக்பாஸுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது.


மேலும் தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி உள்ளனர்.



அதேபோல் ஹிந்தி பிக்பாஸை பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் கடந்த 13 வருடங்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பிக்பாட் 16ஆவது சீசனையும் சல்மானே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற அவர் விரும்புவதாகவும் டிவி நிர்வாகம்தான் அவரை விடவில்லை எனவும் பாலிவுட்டில் பேச்சு இருக்கிறது. இதற்கிடையே பிக்பாஸ் 16ல் போட்டியிட இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.


இந்நிலையில், இந்தி பிக்பாஸ் 16 வது சீசனுக்கு சல்மான் கான் தொகுத்து வழங்க ரூ.1050 கோடி சம்பளமாக கேட்டு உள்ளாராம்.



கடந்த சீசனில் ரூ.350 கோடி சம்பளமாக வாங்கிய சல்மான் கான், தற்போது அதைவிட மூன்று மடங்கு அதிகமாக கேட்டுள்ளது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சற்று கலக்கமடையச் செய்துள்ளது.


பலமுறை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முயற்சி செய்த சல்மான் கான் இந்த முறை அதிக சம்பளம் கேட்டதால் டிவி நிர்வாகமே அவரை விடுவித்துவிடும். அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.


இது போன்ற viral and trending செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC உடன் இணைந்திருங்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்