Ticker

6/recent/ticker-posts

அரசு பனி பெற்ற 10 மாத குழந்தை - காரணம் தெரியுமா?

அரசு பனி பெற்ற 10 மாத குழந்தை - காரணம் தெரியுமா?


இந்தியாவின் சத்தீஸ்கர் என்ற மாநிலத்தில் தனது பெற்றோரை இழந்த 10  மாத குழந்தைக்கு அரசு பனி வழங்கப்பட்டுள்ளது. 

baby gets jobs


சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் யாதவ். இவரது மனைவியின் பெயர் மஞ்சு யாதவ். இந்த தம்பதியினருக்கே இந்த குழந்தை பிறந்துள்ளது. ராஜேந்திர குமார்  ரயில்வே யார்டில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார், கடந்த ஜூன் முதலாம்  திகதி எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் ராஜேந்திர குமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர்.


அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்களின் 10  மாத பெண் குழந்தையை அவளின் பாட்டி தான் பராமரித்து வருகிறார். 



இந்த நிலையில் தான் பத்து மாத கைக்குழந்தைக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைத்துள்ளது. ராய்ப்பூர் இரயில்வே பிரிவு இரயில்வே வேலைக்கான அவரது பதிவை முடித்துள்ளது. இந்த பதிவின் மூலம், ரயில்வேயில் குழந்தையின் வேலை உறுதியானது.  குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன், அவர் ரயில்வேயில் பணியமர்த்தப்படுவார். இரயில்வேயின் கூற்றுப்படி, 10 மாத குழந்தை பே.ராதிகா இரயில்வே பணிக்கு கருணை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனவும்  . இதற்காக குழந்தையின் கைரேகையை பதிவுக்காக எடுத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.   


அதுமட்டுமல்லாது பெற்றோரை இழந்த அந்த பெண் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் படி ராய்பூர்  ரயில்வே யின் மூலமாக அணைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி குழந்தையை குழந்தையின் உறவினர்கள் ரயில்வே அலுவலகத்திட்கு அழைத்து சென்றுள்ளனர். 


தனது தாய் தந்தையை இழந்து விட்டோம் என்றும் குழந்தைக்கு தெரியாத நிலையில் தான் அக் குழந்தைக்கு இந்த வாய்ப்பும் கிடைத்துள்ளது. தனது 18  வயது பூர்த்தியை குலந்திக்கு இந்த வேலை கிடைக்கும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்