Ticker

6/recent/ticker-posts

ஐ போன் 14 - ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்.

ஐ போன் 14 - ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல். 


ஆப்பிள் ஐ போன் இன்று பலரின் கனவு இந்த மொபைல எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று. ஐ போன் வச்சிருந்த தான் கெத்து அப்படி எல்லாம் நெஞ்சிட்டு இருக்கவங்களும் இங்க பாதி பேர் இருக்க தான் செய்றாங்க. அதுக்கு ஏத்த மாதிரியே ஆப்பிள் நிறுவனமும் தனது தயாரிப்பான ஐ போனை பாத்து பாத்து செதுகிட்டு தான் இருகாங்க. 



மொபைல் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் தனக்கென அசைக்க முடியாத ஒரு இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். 


தற்போது வரை 13 மாடல்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் அடுத்த வெளியீடான ஐ போன் 14 எப்போது வெளிவரும் என்று ஐ போன் யூஸர்ஸ் காத்திருகின்றனர். எனினும் ஐபோன் 14 ரிலீஸ் தள்ளி போடப்படவில்லை என்றும் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 



fall event

இதன் படி ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்படும் fall event என்ற நிகழ்ச்சியின் பொது ஆப்பிள் நிறுவனத்தின் எல்லா புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்வார்கள். அனால் கடந்த வருடம் சில தயாரிப்புகள் ஒன்லைன் மூலமாக வெளியிட்டனர். 


ஐ போன் 14 பற்றிய அவ்வப்போது தகவல்கள் வெளிவந்தாலும்  அதன் வெளியிடும் திகதி ஒவ்வொரு முறையும் மாற்றம் செய்யப்பட்டது. 


தற்போது வந்த தகவலின் படி இந்த ஐபோன் 14 இந்தியாவில் 79000 ரூபாவாகவும் அதன் ஹயஸ்ட் மாடல் 100000 ரூபா வரையிலும் விற்கப்படும் என்று தெரியவந்துள்ளது. செப்டம்பர் மாதத்தின் மத்தியில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ஐ வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகின.



ஐ போன் 14

எனினும் திகதி மாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஐ போன் 14 அறிமுகம் செப்டம்பர் 7ஆம் திகதி அன்று நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இதன் போது ஆப்பிள் நிறுவனம் ஐ போன் சீரிஸ் - ஐபோன் 14 , ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் இந்த நான்கு மாடல்களையும் வெளியிடவுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்