Ticker

6/recent/ticker-posts

பரவும் தக்காளி காய்ச்சல் - எச்சரிக்கை!

பரவும் தக்காளி காய்ச்சல் - எச்சரிக்கை!



கடந்த மூன்று வருடங்களாக வாட்டி எடுத்து கொரோனா. உலகமே ஸ்தம்பித்து போனது. அதிலிருந்து மீண்டு வர பெரும் பாடு பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு  திரும்பும்போது தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியிருப்பது மக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது.


அதை தொடர்ந்து குரங்கு அம்மை என்ற ஒரு வைரஸ் பரவ ஆரம்பித்தது அது இன்னும் பல நாடுகளில் பரவி கொண்டு தான் இருக்கின்றது. பல மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இதெல்லாம் இப்படி இருக்க இப்போது புதிதாக இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தக்காளி காய்ச்சல் 

தக்காளி காய்ச்சல் என்பது ஒரு அரிய வைரஸ் நோயாகும், இது உடலில் சிவப்பு நிற தடிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கான அறிகுறிகளும் சிகிச்சையும் சிக்குன்குனியா அல்லது டெங்குவைப் போலவே உள்ளன. பெரியவர்களை விட குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.



பாதிப்புக்கள்

இந்தியாவில் மே மாதம் முதல் தக்காளி காய்ச்சல் பாதிப்புக்கள் பதிவாகி வருகின்றன. இதுவரை 80 பேருக்கு மேல்  தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மற்றும் ஒடிஷா மாநிலத்தில் இந்த காய்ச்சல் பரவி வருவதாகவும்,  குறிப்பாக 1  முதல் 9  வரையான குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.


கேரளா மாநிலம் கொல்லம் என்ற பகுதியில் 5 வயது குழந்தைக்கு தக்காளி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியபோது தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.


தக்காளி காய்ச்சல் அறிகுறிகள்

தக்காளி காய்ச்சல் பின்வரும் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது.

-- காய்ச்சல்

-- வாயில் வலி புண்கள்

-- கைகள், கால்கள் மற்றும் பிட்டம் ஆகியவற்றில் கொப்புளங்களுடன் சொறி

-- உடல் வலி

-- மூட்டு வீக்கம்

-- சோர்வு

-- தோல் எரிச்சல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்