Ticker

6/recent/ticker-posts

கனடா செல்வோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

 கனடா அரசால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு 


கனடா செல்வோருக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை நீடிக்க உள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.


என்னவென்றால் செப்டம்பர்  மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மீண்டும் கொரோன பரிசோதனைகளும் அதன் கட்டுப்பாடுகளும் நடைமுறை படுத்தப்பட உள்ளன என்று அரசாங்க தெரிவித்துள்ளது. ஆதலால்  தடுப்பூசி பெறாத பயணிகள் கனடாவுக்குள் நுழைந்ததும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு  முதல் நாள் மற்றும் எட்டாவது நாள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுதல், யாராவது ஒருவரைத் தடுத்து நிறுத்தி, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தல் முதலான நடைமுறைகள் தொடர உள்ளன.

கொரோனா காலகட்டம் இன்னமும் முடியவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். கொரோனா வைரஸிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நம்மால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யவேண்டும்ன் என்று கனடா சுகாதாரத்துறை அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார். 




கனடாவுக்கு பயணிக்கும் அனைவரும் தாங்கள் பயணம் புறப்படுவதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் ArriveCan அப் அல்லது இணையதளத்தை பயன்படுத்தி தங்கள் பயணம் குறித்த தகவலை வழங்கவேண்டும் என்றும் அவரும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், கனடா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மையங்கள் விமான நிலையங்களுக்கு வெளியே அமைக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கை அதிரித்துவரும் நிலையில்  பரிசோதனை செய்து தக்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்