Ticker

6/recent/ticker-posts

24 வயது பையனை மணந்த 61 வயது மூதாட்டி குழந்தைக்கு 1 கோடி

24 வயது பையனை மணந்த 61 வயது மூதாட்டி குழந்தைக்கு 1 கோடி  

காதலுக்கு கண் இல்லை அது ஜாதி மதம் இனம் மொழி ஏழை பணம் என்றும் ஏதும் பாகாதுனு சொல்லுவாங்க. ஆனா இங்க பலருக்கு அது வயசு கூட பாக்க மாட்டேங்குது.  ஏன் அப்டினு கேக்குறீங்களா,  24 வயதான இளைஞர் 61 வயதான பெண்மணியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் இணையதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது அந்த தம்பதி ரூபாய் ஒரு கோடி செலவு செய்து குழந்தையும் பெறவுள்ளனர். 

24 வயதே ஆன குரான் மெக்கெயின் என்பவர் 61 வயதான செரில் மெக் க்ரிகரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் குரான் 15 வயதாக இருந்தபோது தான் முதன் முதலில் சந்தித்துள்ளனர். அப்போதே செரிலுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தனர் அந்த குழந்தைகளுக்கும்  குழந்தைகள் இருந்தனர். குரான் அப்போது செரிலின் மகன் கிறிஸ் என்பவருக்கு பணியாற்றி வந்தார்.

ஆனால் அந்த ஒரு காலப்பகுதியில் இருவருக்கும் இடையில் எந்த ஒரு தொடர்பும் இருந்ததில்லை. ஆனால் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது, அதன் பிறகு ஒரு வருடம் டேட் செய்துள்ளனர். பின் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். 

என்னதான் அவர்கள் முடிவெடுத்திருந்தாலும் உலகம் சும்மாவா இருக்கும் தன்னை விட 37 வருடங்கள் மூத்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதால், பலரும் அந்த குரானை தூற்றி வந்தனர். செரிலிடம் இருக்கும் சொத்துக்காகத்தான் குரான் அவரை காதலிப்பது போல நடிக்கிறார் என்றும், திருமணம் என்பதெல்லாம் பொய் நாடகம் என்றும் கூறி வந்தனர்.

லைவ் டெலிகாஸ்ட்டில் திருமணம் 

ஆனால் இந்த காதல் ஜோடி எவன் என்ன சொன்னாலும் எங்களுக்கு என்ன என்று அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த வருடம் இருவரும் திருமண செய்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் இவர்களது திருமணம் லைவ் டெலிகாஸ்ட்டும் செய்யப்பட்டது.

தற்போது இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை பெறவும் முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே செரிலுக்கு 7 குழந்தைகள் மற்றும் 17 பேரக்குழந்தைகள்  இருக்கும் நிலையில், தற்போது பிறக்கவுள்ளது இவருக்கு எட்டாவது குழந்தையாகும்.


ஆனால் குரானுக்கு இது தான் முதல் குழந்தையாம். இவர்கள் இக்குழந்தையை வாடகை தாய் மூலமாக பெறவுள்ளனர். அதட்காக  இவர்கள்  ரூபாய் 1 கோடி செய்யவுள்ள செலவு செய்யஉள்ளனர் . 2023 ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை கிடைக்கும் எனவும்,

இந்த நிகழ்வை அவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளனர். செரில் குழந்தைக்கு தேவையானவற்றை ஷாப் செய்ய ஆரம்பித்துவிட்டதாகவும், மேலும் ஒரு Baby Shower நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யப்போவதாக கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்