Ticker

6/recent/ticker-posts

21 வயதில் மிஸ் இந்தியா பட்டம்

21 வயதில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி சினி ஷெட்டி!

2022 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 



 பெமினா இதழ் சார்பாக ஆண்டுதோறும் மிஸ் இந்தியா போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  அழகிகள்  பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும்  71வது மிஸ் இந்தியா போட்டிக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் இந்தியாவின் பல மாநிலங்களில்  இருந்து 31 பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த இறுதி போட்டி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

 


இந்த இறுதி போட்டியில் இந்த  ஆண்டின் மிஸ் இந்தியாவாக கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி தேர்வு செய்யப்பட்டார்.  அவருக்கு  2020 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவான  வாரணாசி,  மிஸ் இந்தியா மகுடத்தை சூட்டினார்.  இரண்டாவது இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவதும், 3வது இடத்தை உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஷினதா சவுஹானும் இப்போட்டியில் பெற்றுள்ளனர்.

  


யார் இந்த சினி ஷெட்டி ?


21 வயதான  சினி ஷெட்டி மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வாழ்ந்து வருகின்றார்.  தற்போது CFA எனப்படும் பட்டய நிதி ஆய்வாளருக்கு படித்து வருகிறார்.  மற்றும் பரதநாட்டியத்திலும் சிறந்தவர் ஆவார். இதட்கு முன்பாக INIFD Miss Talented, Times Miss Body பெஔதிபுல் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். 



இந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் நடுவர்களாக  நடிகைகள் நேகா துபியா, மலைகா அரோரா, டினோ மொரியா, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் மற்றும் நடிகர்கள் ராகுல் கண்ணா, ரோகித் காந்தி, ஷியாமக் தவார் ஆகியோர் பங்கேற்றனர்.  



கருத்துரையிடுக

0 கருத்துகள்