Ticker

6/recent/ticker-posts

லியோ வில் இணைவாரா கமல்? 200 % உறுதியானது தகவல்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ'  கோலிவுட் சினிமாவே எதிர்பார்க்கும் படமாக உருவாகி வருகிறது. எக்கச்சக்கமான பிரபலங்களுடன் பிரம்மாண்டமாக இந்தப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்த நாளில் இருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஹிமாலய உச்சத்தை தொட்டுவிட்டது.



'விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில்  'லியோ' உருவாகி வருகிறது. கடந்த வருடம் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி என மாஸான கூட்டணியுடன் வெளியான விக்ரம் படம் அதிரிபுதிரியான ஹிட்டடித்தது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.


இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார். அதே போல் கமல் ஹாசன் லியோ படத்தில் நடிக்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. 



ஒரு வேலை லியோ படமும் LCU ஆகா இருக்கும் என சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுதினத்துள்ள நிலையில் , லியோ படத்தில் கமல் ஹாசனை நடிக்க வைக்க இதுவரை லோகேஷ் கனகராஜ் முடிவு எடுக்கவில்லையாம். 200 சதவீதம் கமல் இப்படத்தில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால், லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த முடிவை மாற்றி கமலை நடிக்க வைத்தால் கூட ஆச்சிரியப்பட வேண்டாம் என்று கூறப்படுகிறது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்