Ticker

6/recent/ticker-posts

குக் வித் கோமாளி டைட்டில் வின்னரின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

குக் வித் கோமாளி டைட்டில் வின்னரின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? 

குக் வித் கோமாளி... அநேக இளஞர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு நிகழ்ச்சி. அநேகருக்கு இது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றும் சொல்லிட்டு இருகாங்க. 



விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி, மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று 2 சீசன்கள் முடிந்து மக்கள் ஆதரவோடு 3வது சீசனையும் வெற்றிகரமாக முடிக்கப்போகிறது குக் வித் கோமாளி.  பிக் பாஸ்கு அடுத்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி. 


குறிப்பாக சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. ஏன் இந்தளவிட்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக காரணம் என்று பார்த்தால், யார் இந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் சிரிக்காம இருக்கவே முடியாது. அதுமட்டுமில்ல அநேகருக்கு அநேக பிரச்சனைகள் மற்றும் ஸ்ட்ரெஸ்ல தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆகவும் இந்த நிகழ்ச்சி இருக்கிறதென்றும்  அநேகர் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். 



மேலும் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3-ன் பைனல்ஸ் என்பதால் இதில் யார் வெற்றி பெற்றார் என்பதை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். 


ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் ஸ்ருதிகா தான் வின்னர் என ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அவருக்கு அடுத்தபடியாக யார் யார் எந் எ இடத்தை பிடித்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளவும் மக்கள் ஆவலாக உள்ளனர். 


இந்நிலையில் இந்த வின்னருக்கு எவ்வளவு பரிசு தொகை அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவழும் வெளியாகியுள்ளது. அதன்படி முதலாவதாக வருபவருக்கு 10 லட்சம் ரூபா பரிசு தொகை வழக்கப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.



இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இருப்பினும் கடந்த சீசன் வின்னர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அதை வைத்த பார்க்கும் போது 10 லட்சம் கொடுக்க பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.  


இப்போ அடுத்த சீசனுக்கு மக்களை ஆயத்தமாகியுள்ளனர். எப்படியும் அடுத்த சீஸனும் விஜய் டிவி தொகுத்து வழங்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அநேகர் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 6ம் விரைவில் ஆரம்பிக்க உள்ளனர் விஜய் டிவி . இத்தடைக்கான போட்டியாளர்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்