Ticker

6/recent/ticker-posts

மீள் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்- கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்.

மீள் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்- கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்.

கடந்த ஆண்டுகளில் வந்த கொரோனா முழு உலகத்தின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து என்று கூறலாம். அனால் பல நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை ஒரு வழியாக சரிவில் நின்று காத்துக்கொண்டார்கள். கொர்கொன காலப்பகுதியிலும் சரி அதட்கு பிறகும் சரி பொருளாதாரத்தில் மீண்டு வரமுடியாத ஒரு பாதிப்பு இலங்கைக்கு வந்தது. 



இலங்கையின் அரசாங்கமும் ஆட்சிமுறையும் அதட்கு ஒரு காரணமாக இருந்தது. அதனால் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடுமுழுவதும் அரங்கேறியது. இந்நிலையில் தான் பாடசாலைகளும் மூடப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் கொரோனா நிறைவுக்கு பின்னர் வழமைக்கு திரும்பின ஆனால் மீண்டும் பொருளாதார நெருக்கடி,  எரிபொருள் பற்றாக்குறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமா பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டன. 


குறிப்பாக சொல்லப்போனால் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்லைன் மூலமாகவே பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தற்போது எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை 25 மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


 

அதில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை(25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.



குறித்த அறிக்கையில் மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பொறுப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பமாவது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இருப்பினும்,  திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே பாடசாலைகள் இடம்பெறும் இது மாரு அறிவித்தல் வரும்வரை அமுலில் இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 



புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்