Ticker

6/recent/ticker-posts

இரண்டே வருடத்தில் 10 கோடி.. ஊரடங்கில் வேலை இழந்த இளைஞர்கள் சம்பாதித்தது எப்படி?

இரண்டே வருடத்தில் 10 கோடி.. ஊரடங்கில் வேலை இழந்த இளைஞர்கள் சம்பாதித்தது எப்படி? 



கொரோனா காரணமாக பல உலக நாடுகள் முடங்கின. மீளமுடியாத மிகப்பெரிய பொருளாதார சரிவுகளை சந்தித்தது. மக்களின் வாழ்க்கை முறையும் மாறின என்ற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பலரும் கஷ்டப்பட்டனர். அதுமட்டுமா? பல முன்னணி நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டன, பல நிறுவனங்கள் பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்தது குறிப்பிட்ட ஊழியர்களை கொண்டே நிறுவனத்தை நடத்தி வந்தனர். 2  வருடங்கள் கொரோனா ஒரு ஆட்டம் ஆட்டி விட்டு தான் சென்றது. 


பலரும் வேலை இழந்து தவித்து கொண்டிருந்தனர். அனால் இந்த இருவர் மட்டும் அந்த 2  வருடத்தில் 10  கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா? வாங்க எப்படினு பாக்கலாம்...




ஊரடங்கு நேரத்தில் வேலை இழந்த இரண்டு நண்பர்கள் கடும் பொருளாதார சிக்கலில் இருந்த நிலையில் துணிவுடன் சொந்த தொழில் தொடங்கினர். அவர்கள் தோடணியை அந்த தொழில் அதிகளவான லாபத்தை ஈட்டித்தந்து. 


ஆகாஷ் மஸ்கே மற்றும் ஆதித்ய கீர்த்தனே இருவரும் பொறியிலாளர்கள் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது இவர்களின் வாழ்வில் எதிர்ப்பாராத ஒன்றாக வேலையை இழந்தனர். வேலைதானே போன போகட்டும்னு சொல்லி வேலை இழந்த முதல் மாதத்தை இருவரும் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் பார்த்தே கழித்துள்ள்ளனர். அனால் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி எதுவும் அமைய வில்லை கொரியாவின் எண்ணிக்கையும் அதிகரித்தது ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டது, அப்போது தான் இருவருக்கும் அவர்களின் எதிர்காலத்தை குறித்த பயம் ஏட்படுகின்றது. 



இதனையடுத்து பல நிறுவனத்தில் முயற்சி செய்தும் வேலை கிடைக்காததால் அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தனர். வெற்றிகரமான வணிகங்களை பற்றிய புத்தகங்களைப் படித்து சொந்த தொழிலுக்கான ஒரு நுட்ப அறிவை பெற்றுக்கொண்டனர். உள்ளூர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இறைச்சி மற்றும் கோழி பதப்படுத்துதல் குறித்த தொழில் பயிற்சி வகுப்பில் இருவரும் சேர்ந்தனர்.


அதில் அவர்களுக்கு வந்த ஒரு ஐடியா தான் சில்லறை நுகர்வோருக்கு இறைச்சியை குறைந்த விலையில் மற்றும் சலுகைகள் இடிப்படையில் வழங்க வேண்டும் என்று. இந்த ஒரு முயட்சி வித்தியாசமானதாக இருந்துள்ளது. எப்போவும் மாதிரிதான் முதல் அவர்களின் குடும்பத்தில் பெரிதாக யாரும் அதட்கு ஆதரவளிக்கவில்லையாம். 



இந்த மாதிரி தொழில் செய்தால் யாரும் திருமணம் செய்துகொள்ள வரமாட்டார்கள் என்ற பயமும் பெற்றோருக்கு இருந்துள்ளதாம். அனால் நாளடைவில் ஒரு வெற்றி பெட்ரா வணிகமாக அது மாறியது, வெற்றியை கண்டா சொந்த அவர்களின் பக்கம் நிக்க ஆரம்பித்துள்ளது. 


இவர்கள் இருவரும்  வெறும் ரூ.25,000 முதலீட்டில் 'Apetitee' என்ற இறைச்சி கடையை திறந்தனர். முதல்கட்டமாக 100 சதுர அடியில் தொடங்கிய 'Apetitee' இறைச்சி வணிகம் இன்று அந்த நண்பர்களின் முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மாதத்திற்கு ரூ.4 லட்சத்திற்கு மேல் விட்பனை செய்கிறது.



இந்த நிலையில் தான் சமீபத்தில் இவர்களின் Apetitee நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ரூ.10 கோடிக்கு Fabi என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் இணை நிறுவனர்களாக அதே நிறுவனத்தில் தொடர்ந்து இருக்கவும்  Fabi நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.. அவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் மற்றும் லாபதில் 40 சதவிகிதம் கொடுக்கப்படும் என்று ஒப்பந்தமும்   செய்யப்பட்டுள்ளது. என Fabi இயக்குனர் ஃபஹத் சையத் கூறினார்.


மேலும் 3 ஆண்டுகள் நிறைவில் 100 கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு வீடுகளுக்கே டெலிவரி செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒன்லைன் சந்தைப்படுத்தலிலும் ஈடுபட்டுள்ளார்களாம். அன்று வேலை இல்லாமல் இருந்த இந்த இருவரும் இன்று 2500 பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்துள்ளனர். 


முயட்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதட்கு இவர்கள் ஒரு சிறந்த முன் உதாரணம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்