Ticker

6/recent/ticker-posts

வகுப்பறையில் மசாஜ் செய்த மாணவன் - பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் ஆசிரியர் - தீயை பரவும் வீடியோ

வகுப்பறையில் மசாஜ் செய்த மாணவன் - பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் ஆசிரியர் - தீயை பரவும் வீடியோ 

ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவன் ஒருவனை மசாஜ் செய்ய வைத்த சம்பவம் சமுக வலைத்தளங்களில் விடியோவாக வைரல் ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த ஆசிரியர் பனி இடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 



மாதா பிதா குரு என்று சொல்லவர்கள் நம் முன்னோர்கள். குரு என்பவர் நம் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமானவர். மதிப்பிட்குரியவர். ஆசிரியர் என்பவர் நமக்கு வழிகாட்டியாவார்.  ஆசிரியர் தான் நாளைய சமுதாயத்தை உருவாக்குகின்றவர். அவரே தவறு செய்தால் நாளைய சமுதாயம் என்னவாகும்? 



ஆசிரியர் பணி என்பது, அறப்பணி என பலரும் கூறி வரும் நிலையில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் செயல் மற்ற ஆசிரியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர், தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் கூறுகிறார்.


அவரின் பேச்சை கேட்டு அந்த மாணவன், நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருக்கும் ஆசிரியைக்கு மசாஜ் செய்கிறார். அப்போது, வகுப்பறையில் மற்ற மாணவ - மாணவியரும் அமர்ந்து உள்ளனர்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து, ஹர்தோய் அடிப்படை கல்வி அதிகாரி பிபி சிங் கூறுகையில், இந்த காணொளியை சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் வெளிச்சத்திற்கு வந்தது என தெரிவித்தார். 


மேலும் ட்ரெண்டிங் நியூஸ் படிக்க...

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்