Ticker

6/recent/ticker-posts

இர்பான் வியூவ் செய்த செயல் - கதறி அழுத கார் கடை ஊழியர்கள்.

இர்பான் வியூவ் செய்த செயல் - கதறி அழுத கார் கடை ஊழியர்கள்.


2  லட்சம் பெறுமதியுள்ள கார் ஒன்றை வெறும் சில்லறைகளாக கொடுத்து வாங்கியுள்ளார்.  ரூ.20 காயின்களை சில்லறையாக கொடுத்து வாங்கியுள்ளார்.



புட் ரிவியூவ் செய்து யூடியூபில் 30 லட்சம் போலோவர்ஸ் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தாயே வைத்துள்ளார். இர்பான், இந்தியா மட்டுமல்ல பல உலக நாடுகளுக்கு சென்று அங்குள்ள உணவகங்களிலும் புட் ரிவியூவ் செய்துள்ளார் இர்பான். எந்த இடத்தில எந்த உணவு இருக்கும் எங்கே எது நல்ல இருக்கும் என்று தனது பாணியில் சொல்லி மக்களை கவர்ந்தவர். இன்னும் குறிப்பாக சொன்னால் பலர் இவருடைய ரிவியூவ்  பார்த்து தான் உணவகங்களுக்கு செல்வார்கள். 


எப்படி வரவேப்பை பெற்றாரோ அதேபோல் சர்ச்சைகளும் இவரை சுற்றி கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இவர் ரிவ்யூ செய்த ஓட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டது.  அங்கு இருந்து கெட்டுப் போன சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் ஆகா ஓகே என ரிவ்யூ செய்த ஓட்டலுக்கு சீல் செய்யப்பட்டதை அடுத்து இர்பான் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தான் அந்த உணவகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரிவ்யூ செய்ததாகவும், அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவுகள் நல்லா இருந்ததால் தான் நான் அப்படி ரிவ்யூ செய்தேன் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இர்பான்.



புட் ரிவியூவ் மட்டுமல்ல இவர் சில சமயங்களை எலக்ட்ரானிக் பொருட்களையும் , வாகனகளையும் ரிவியூவ்  செய்வதுண்டு. இந்நிலையில், தற்போது தான் 2 லட்சத்திற்கு முழுவதும் 20 ரூபாய் காயின்களை சில்லறையாக கொடுத்து புது கார் ஒன்றை வாங்கி உள்ளதாக கூறி ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோவில் தான் எதற்காக அந்த காரை சில்லறை காசுகளை கொடுத்து வாங்கினேன் என்பதையும் விளக்கி உள்ளார்.



அதன்படி 20 ரூபாய் குறித்து மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும் 10 ரூபாய் காயின்கள் செல்லாது என வதந்தி பரவுவது போல் 20 ரூபாய் காயின்களும் செல்லாது என பல பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு 20 ரூபாய் காயின்கள் இருக்கிறதா என்பது கூட தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் 20 ரூபாய் காயின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இந்த காரை முழுவதும் சில்லறை காசுகளை கொடுத்து வாங்கியதாக கூறி உள்ளார். இந்த காரை தனது தங்கை தான் வாங்கி உள்ளதாகவும், அவருக்கு சில்லறை மாற்றி கொடுத்தது நான் தான் என்றும் இர்பான் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.


மேலும் ட்ரெண்டிங் நியூஸ் படிக்க... 

கருத்துரையிடுக

0 கருத்துகள்