Ticker

6/recent/ticker-posts

செக்ஸ் பார்ட்னர் அதிகம் வைத்துகொள்வது பெண்கள் - ஆய்வில் ஆண்களை முந்திய பெண்கள்.

செக்ஸ் பார்ட்னர் அதிகம் வைத்துகொள்வது பெண்கள் - ஆய்வில் ஆண்களை முந்திய பெண்கள்.

பாலியல் பங்காளிகளின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்கள் பின்தங்கவில்லை



ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக பாலியல் உறவுக்கான துணையை வைத்துள்ளார்கள் என் முடிவுகள் வெளியாகியுள்ளன. 


குறிப்பாக எல்லோரின் கருத்தாக இருந்தது ஆண்கள் தான் அதிகமான துணையை வைத்து கொள்வார்கள் என்று. பெண்கள் அந்த விஷயத்தில் ஒழுக்கமானவர்கள் என்றும். அந்த ஒரு கருத்தை தவிடு போடி ஆக்கியுள்ளது இந்த ஆய்வின் முடிவு.


தேசிய குடும்ப நல ஆய்வை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. கடந்த 1992 முதல் இதுவரை 4 ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.



இந்த வரிசையில், 2019 - 2021ம் ஆண்டுக்கான 5வது ஆய்வு, 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 707 மாவட்டங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், மத்திய பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு. ராஜஸ்தானில் சராசரியாக ஆண்களுக்கு 1.8 என்று உள்ள எண்ணிக்கை பெண்களுக்கு  3.1 செக்ஸ் பார்ட்னர்கள் என்ற விகிதத்தில் உள்ளது. 


ஆனால், கருத்துக்கணிப்புக்கு முந்தைய 12 மாதங்களில், தங்கள் மனைவியோ அல்லது துணையாகவோ இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீதம் 4 சதவீதமாக இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 0.5 சதவீதமாக இருந்தது.




இந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா உள்பட 11 மாநிலங்களில், ஆண்களை விட பெண்களுக்கு, ‘Sex Partners’ எனப்படும் பாலியல் உறவுக்கான துணைகள் அதிகம் இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார நல ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.




சுமார் 1.1 லட்சம் பெண்கள், ஒரு லட்சம் ஆண்களிடம் இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக ஆய்வு குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்