Ticker

6/recent/ticker-posts

பாம்பை நடக்க வைத்த இளைஞன் - தீயாய் பரவும் வீடியோ.!

பாம்பை நடக்க வைத்த இளைஞன் - தீயை பரவும் வீடியோ.!

யூடியூப்யில் காணொளியை உருவாக்கிப் பதிவிடும் யூடியூப்பர் ஒருவர் பாம்புக்கு நவீன முறையில் ரோபோடிக் கால்களை உருவாக்கி அதில் பாம்பை நடக்க வைத்து காணொளியைப் பதிவிட்டுள்ளார்.



நாம் அன்றாடம் அநேக விடீயோக்களை பார்க்கின்றோம்.  சில விடீயோக்களை நம்மை சிந்திக்க வைக்கின்றது, சில நம்மை சிரிக்க வைக்கின்றது, சில இப்படியெல்லாம் கூட பண்ண எழுமா என்று கேட்கும் அளவில் உள்ளது, இன்னும் சில எதுக்கு ட இந்த தேவ இல்லாத வேலைனு கேக்குற அளவுக்கு உள்ளது, சில சோகத்தை சில கண்ணீரை, சில ஆச்சர்யத்தை ஏட்படுத்துகின்றன. 


இந்த வகையில் தற்போது பாம்பு ஒன்று நடந்து செல்லும் வீடியோ ஒன்று வைராலகியுள்ளது. இந்த வீடியோ பலரையும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 



அதாவது, பிரபல யூடியூப்பர் ஆலன் பான் தனது  யூடியூப் சேனலில் பாம்பை நடக்க வைக்க ஒரு புது விதமான நவீன ரோபோடிக் கால்களை உருவாக்கி அதனைப் பாம்புக்குப் போட்டு நடக்க வைத்து இந்த விடியோவை எடுத்துள்ளார். அதி அவர் வெற்றியும் கண்டுள்ளார். 


ஆலன் பான் தனது யூடியூப் சேனலில் இந்த வீடியோவை கடந்த சனிக்கிழமை வெளியிட்டார், அதில் அவர் தனது பொறியியல் நுட்பங்களையும்  விளக்கினார். இப்பொது வராயினுள் இந்த வீடியோ ௨ மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 


பாம்புகளுக்கு கால்களை திருப்பி கொடுக்கிறேன் என்ற தலைப்பில் இந்த விடியோவை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு பாம்பு பிரியர் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். 


பலரும் இந்த விடியோவை பார்த்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்