Ticker

6/recent/ticker-posts

ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மின் கட்டணம் 75% அதிகரிப்பு - கட்டண விபரம்

ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மின் கட்டணம் 75% அதிகரிப்பு  -  கட்டண விபரம்


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலைகள் அசாதாரணமான விலை உயர்வை அடைந்துள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பணமிருந்தும் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் இருந்தனர். 

உதாரணமாக சமையல் எரிவாயு பற்றாக்குறை. சமையல் எரிவாயு இல்லாத காரணத்தால் பலரும் மின்சார முறையில் உணவை சமைக்க ஆரம்பித்தனர். தற்போது அதற்கும் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது இந்த மின்சார உயர்வு.  



நாளை (10) முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு  இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 


இதன்படி, 1 முதல் 30 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணம், 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதாவது 264 வீதத்தாலும், 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும் அதாவது  211 வீதத்தாலும், 61 முதல் 90 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 7 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும்  இதன்படி 125 வீதத்தாலும் உயர்த்தப்பட்டுள்ளது.



91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 27 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 50 ரூபாவாக 79 வீதத்தாலும் அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


புதிய கட்டண உயர்வின்படி, 30 யூனிட்டுக்கும் குறைவான மின் கட்டணத்தில் 198 ரூபாய் மேலதிகமாக சேர்க்கப்படும். 30-60 யூனிட்டுகளுக்கு இடையே 200% அதிகரிப்பு அதாவது மின்கட்டண உயர்வு மேலதிகமாக 599 ரூபாய். 60-90 யூனிட்டுகளுக்கு இடையில், 125% கட்டணம் அதிகரிக்கப்படுவதால், மின் கட்டணம் 1461 ரூபாவால் அதிகரிக்கும். மின் கட்டணம் 90-120க்குள் ரூ.2,900 அதிகரிக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்