Ticker

6/recent/ticker-posts

இலங்கை வரும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் சுங்கத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 


கடந்த 2020 ஆண்டு தொடங்கி பல பிரச்சினைகளை உலக நாடுகளும் சந்தித்து வருகின்றன. கொரோனா காரணமாக உள்நாட்டு வெளிநாட்டு பயணங்கள் இடை நிறுத்தப்பட்டன. மீண்டும் வழமைக்கு வந்த பயண சேவைகள் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தயில் நடைபெற்றன. ஆனால் தற்போது பல உலக நாடுகள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. 


அப்பாடா இப்போ எல்லாம் ஓகே ஆகிடும்னு நம்பிட்டு இருந்த இலங்கை மக்களுக்கு வந்த அடுத்த சோதனை தான் பொருளாதார பிரச்சினை. பொருளாதாரத்தில் ஏட்பட்ட வீழ்ச்சி காரணமாக  இறக்குமதி ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணி பிரச்சினைகளால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சுங்க திணைக்களம்.


இந்த நிலையில் தான் விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு சுங்க திணைக்களம் இந்த முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது. 


அதென்னவென்றால் : தடைசெய்யப்பட்ட மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் அல்லது வர்த்தக பொருட்களை அல்லது உடன் வராத பயணிகளின் பொருட்களை விமான நிலையத்தினூடாக எடுத்து வருவதை தவிர்க்குமாறு சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பி.பி.எஸ்.சி.நோனிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 


கடந்த நாட்களில் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுவரும்  பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


தடைசெய்யப்பட்ட பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்து, அலங்கார செடிகள் போன்ற பொருட்களும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி பிரச்சினைகளால் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பொருட்களும் இதில் அடங்கும்.


சில பயணிகள் சுங்கக் கட்டளைச் சட்டம்,  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறி வணிக அளவுகளில் பொருட்களை கொண்டு வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.


எனவே, விமான நிலையம் வழியாக குறித்த பொருட்களை கொண்டு வரவேண்டாம். இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால் கொண்டுவரப்பட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்யப்படும்.


மீறினால், சுங்கச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்