Ticker

6/recent/ticker-posts

ஷங்கரின் மகள் அதிதியை பார்த்தால் அப்படி தெரியவே இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

ஷங்கர் மகளா இது? ஷங்கரின் மகள் அதிதியை பார்த்தால் அப்படி தெரியவே இல்லை என்கிறார்கள் ரசிகர்கள். 


ஆகஸ்ட் 12 உலகமெங்கும் திரைக்கு வந்தது விருமன் திரைப்படம். விருமன் படம் பார்த்தவர்கள், ஷங்கரின் மகள் அதிதியை பார்த்தால் அப்படி தெரியவே இல்லை என்கிறார்கள்.



அந்தளவுக்கு விருமன் படம் பார்த்தசர்களை ஈர்த்துவிட்டார் அதிதி ஷங்கர். தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கவர்ந்து விட்டார் அதிதி சங்கர். 

யார் இந்த அதிதி சங்கர்?

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி உள்ளிட்டோர் நடித்த விருமன் படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விருமன் மூலம் நடிகையாகியிருக்கும் அதிதி பற்றி தான் இன்று பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 



அந்தளவுக்கு அதிதியின் நடிப்பு உள்ளது. இது அதிதியின் முதல் படம் என்று நம்ப முடியவில்லை. முதல் முறையாக கேமரா முன்பு நின்றது போன்று இல்லை. மிகவும் தைரியமாக நடித்திருக்கிறார். கோலிவுட்டில் அதிதி ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் பாடிய மதுரவீரன் பாடலும் அருமை. பாடகியாகவும் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.


அதிதிக்கு பி.ஆர்.ஓ. யாரும் தேவையில்லை. அவரே தனக்கு அழகாக விளம்பரம் தேடுகிறார். பேட்டிகளில் அதிதி பேசிய விதம் பலரையும் கவர்ந்துவிட்டது. அடேங்கப்பா, இந்த பொண்ண பார்த்தால் புதுசுனு யாராலும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பேசுகிறார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.



விருமன் படத்தை தொடர்ந்து அதிதி அடுத்த படமாக சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

யார் இந்த அதிதி சங்கர்?

இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விடுவாரென திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்