Ticker

6/recent/ticker-posts

குடும்பத்தை காப்பற்ற கணவனை வாடகைக்கு விட்ட மனைவி...

 குடும்பத்தை காப்பற்ற கணவனை வாடகைக்கு விட்ட மனைவி...


இங்கிலாந்தைச்சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப சூழ்நிலைக்காரணமாக தனது கணவரை  வாடகைக்கு விடும் தொழிலை நடத்திவருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்த தம்பதியினர் சோசியல் மீடியாவிலும் தற்போது ட்ரெண்ட் ஆகி உள்ளனர்.

2019 கொரோனா ஆரம்பித்ததில் இருந்து உலகம் முழுவதும் பலரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். பலருக்கும் வேலை வாய்ப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் தமக்கு தெரிந்த கை தொழில்களை செய்யவும், Youtube சேனல் ஸ்டார்ட் செய்வது போன்று வீட்டில் இருந்தே இலகுவாக பணம் சம்பாதிக்கும் முறையை கண்டுபிடித்து வாழ்க்கையை நடத்திச்செல்ல ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல் சிலர் வித்தியாசமான வேலைகளையும் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். இவ்வாறு கொரோனா பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த இந்த பெண்மணி செய்தது தன இன்று ட்ரெண்டிங். 



இங்கிலாந்தைச்சேர்ந்த லாரா என்ற பெண் தனது கணவர் ஜேம்ஸ்ஸை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்துள்ளாராம்.. எப்ட்னு யோசிக்குறீங்களா? லாராவின் கணவர் ஜேம்ஸ், வேலைக்கு சென்று வீடு திரும்பியதும் தனது ஓய்வின் போதும், எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சின்ன சின்ன அலங்காரம் செய்வது, தோட்டத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, பழைய பொருள்களைக் கொண்டு வீட்டிற்கு தேவையானப் பொருள்களை செய்வது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் பழக்கம் உள்ளவர். பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட இந்த குடும்பம் வருமானம் ஒழுங்காக இல்லாத காரணத்தால் லாரா தனது கணவரின் இந்த திறமைகளை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்து தனது கணவரின் திறமையை தனது வீட்டிற்கு மட்டுமில்லாமல், ஏன் மற்றவர்களுக்கு பயன்படுத்தக்கூடாது என திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து திறமையுள்ள எனது கணவர் விற்பனைக்கு என்று அதாவது Rent my Handy husband என்ற இணையதளம் ஒன்றை உருவாக்கி வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். 

கணவரை வாடகைக்கு விட்டு சம்பநதிக்கும் முடிவு ஏன்? 



லாரா- ஜேம்ஸ் தம்பதியினருக்கு ௩ குழந்தைகள் இருப்பதாகவும் அதில் இரண்டு 3 குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்துள்ளது. நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவனம் ஒன்றில் இரவு நேர தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் இதில் வருமானம் சரியாக இல்லாததாலும் வேலையும் சரியாக கிடைக்காததாலும், தனது கணவரின் திறமையை வைத்து வருமானம் ஈட்டலாம் என்று முடிவு செய்து வாடகைக்கு விடும் தொழிலை ஆரம்பித்துள்ளனர். இதற்குக் கட்டணமாக 35 பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3, 365 ஆகும் என்று தெரிய வந்துள்ளபோது, இது குறித்து லாரா தெரிவிக்கையில், சின்ன வேலைகளுக்கு பில்டர்ஸ்கள் யாராலும் வர மாட்டார்கள் என்பதால் தன்னுடைய கணவர் அந்த பணிகளை எளிமையாக மேற்கொள்கிறார். இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைப்பதாகவும் நெகிழ்வுடன் கூறியுள்ளார். 


இதன் மூலம் வரும் வருமானத்தில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிகிச்சையை மேட்கொள்வதாகவும் மேற்படிப்பு படிக்கவும் உதவியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  எனினும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அவர்கள் கேட்கும் வேலையை செய்துக்கொடுப்போம் என்றும் கூறியுள்ளார். 


இதை குறித்து சம்ஸ் கூறுகையில், இதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பத்தை பராமரிப்பதாகவும் மனைவிக்கு உதவியாக குழந்தைகளைப்பாராமரிக்க முடிகிறது எனவும் கூறுகிறார். 


எவ்வளுதான் கஷ்டம் என்றாலும் இதன் மூலம் முடியாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கது. 

இது போன்ற viral and trending செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC உடன் இணைந்திருங்கள். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்