Ticker

6/recent/ticker-posts

49 ஆண்டுகளாய் தொடர்ந்த கனடா – டென்மார்க் whiskey war முடிவுக்கு வந்தது.

 49  ஆண்டுகளாய் தொடர்ந்த கனடா – டென்மார்க் whiskey  war  முடிவுக்கு வந்தது. 


கனடா மற்றும் டென்மார்க் நாடுகளுக்கிடையில் இடையே எல்லைகளை வரையறுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1973-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள ஹான்ஸ் தீவு (Hans Island) யாருக்கு சொந்தம் என்று முடிவெடுக்க 40  ஆண்டுகள் ஆகியுள்ளது. 


Whiskey war 


இத தீவுக்கு இப்படி அடிச்சிக்குறாங்களே. அந்த தீவு மிக பெரியது அப்பறம் நெறய கனிம வளங்கள் எல்லாம் இருக்கு போலன்னு நீங்க மேனஜின்கன அதன் தப்பு . வெறும் 1.3  சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட குட்டித் தீவு அந்த தீவில் எந்த கனிம வளங்களும் இல்ல. அங்காள மக்கள் யாரும் வாழவும் இல்லை. வெறும் பாறைகள் மட்டுமே அந்த தீவில் உள்ளது. இருந்தாலும் அந்தத் தீவுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வந்தன.




ஒரு புறாவுக்கு போரா? என்ற டயலாக் ஞாபகம் வருதில்ல. 

 

‘Whisky War’ என்று பெயர் வர கரணம்.


1984-ஆம் ஆண்டில் டென்மாா்க் அமைச்சர் ஒருவா் டென்மார்க் நாட்டின் கொடியையும் மது போத்தல் ஒன்றையும் வைத்து ‘டென்மாா்க் தீவிற்கு நல்வரவு’ என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார். இதை பார்த்த கனடா நாட்டினர்  அதற்குப் பதிலடியாக, கனடா நாட்டுக் கொடியையும் கனடா மது போத்தலையும் அங்கு  வைத்தனா்.  அதன் தொடா்ச்சியாக, இரு நாட்டு கொடிகளும் மது போத்தல்களும் ஹான்ஸ் தீவில் போட்டியாக வைக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாகவே கனடா மற்றும் டென்மார்க் நாடுகளின் எல்லை பிரச்சினை ‘Whisky War’ என்று அழைக்கப்பட்டது. 

Hans Isalnd


40 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த எல்லை பிரச்சினை இப்பொது தான் முடிவுக்கு வந்துள்ளது. இந்த இரு நாடுகளும் இந்த தீவை பிரித்து கொள்வதாக முடிவெடுத்து  ஒப்பந்தத்தில் கையபோப்பம் இட்டுள்ளனர். 





கருத்துரையிடுக

0 கருத்துகள்