Ticker

6/recent/ticker-posts

வெளிநாடொன்றில் எல்லையை கடக்க முட்பட்டதால் இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொலை.

வெளிநாடொன்றில் எல்லையை கடக்க முட்பட்டதால்  இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொலை - நகரத்தில் பரபரப்பு.


வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நம்மவரின் நமக்கு தெரியாத அவளை நிலைகள் பல உண்டு. அதில் நாம் அறிவது சொற்பமே. 



அனுமதியின்றி தமது எல்லையை கடக்க முயன்றதால் இரு தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளது. நண்பரின் பைறந்தாநாள் விழாவில் கலந்து கொள்ள சென்ற போதே இந்த இரு தமிழர்களும் எல்லையை கடக்க முயட்சித்துள்ளனர். 


இந்தியாவின் மணிப்பூரில் உள்ள மோரே பகுதியில்  இந்தியாவின் மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் மோரே பகுதியில் வசித்து வந்த, மோகன் மற்றும் அய்யனார் ஆகிய இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மியன்மார் நாட்டின் எல்லையை கடக்க முயட்சித்த வேலையே சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதட்காக மியன்மாரில் உள்ள தாமு என்னும் பகுதிக்கு செல்லும்போது உரிய அனுமதி ஏதும் பெறாமல் எல்லையை தாண்ட முட்பட்ட வேலை தன இந்த சம்பவம் நடந்துள்ளது. 



உயிரிழந்தவர்களில் ஒருவர் 28 வயதான மோகன்  ஆட்டோ ஓட்டுநரான பணிபுரிந்து வருகின்றார். அவருக்கு இரு வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது எனவும், மற்றொருவர்  35 வயதான அய்யனார் எனும் சிறு வியாபாரி எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எதிர்பாராத விதமாக இருவரும் மியான்மர் எல்லைக்குள் நுழைந்ததால், அவர்களை உளவாளிகள் என கருதி அந்நாட்டு இராணுவத்தினர் சுட்டுக் கொன்று இருக்கலாம் என மோரே தமிழ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


அனால் இருவரையும் பயங்கரவாத குழுவினர் சுட்டு கொன்றதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது, இதற்கனக விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் விசாரணைகளின் முடிவில் தான் உறுதியாக எதுவும் கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்கள். 


இருவரின் உடல்களையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதட்கான நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர் மோரே பகுதியில் பரபரப்பு ஏட்பட்டு கடைகள் ஹோட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டது. இதனால் அங்கு வாழும் மக்களும் சுற்றுலா பயணிகளும் பெரும் சிரமத்திட்க்குள்ளாகியுள்ளனர். காவல்துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்