Ticker

6/recent/ticker-posts

மின் தடையால் Exchange ஆன மணப்பெண்கள்

திருமணத்தில் ஏற்பட்ட  திடீர் மின் தடையால்   - மாறிப்போன மணப்பெண்கள்! 


மத்திய பிரதேச மாநிலம் ஒன்றில் , மின் வெட்டு காரணத்தால் மணமகன்கள் மணப்பெண்களை மாற்றி திருமணம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.



மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ரமேஷ் முடிவு செய்தார். அதன்படி, இரு வேறு குடும்பங்களை சேர்ந்த கணேஷ், போலா ஆகியவருக்கும் தனது இரண்டு மகள்களை திருமணம் செய்து வைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். 


இருவருக்கும் ஒரே மேடையில் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்டபாடுகளும் செய்யப்பட்டது. அவர்களின் வழக்கப்படி பெண்களுக்கு ஒரே மாதிரியான ஆடைகள் அணிவிக்கப்பட்டு முக்காடும் போடப்பட்டது. திருமண நிகழுவுகல் நடைபெற்று கொண்டிருக்கும் பொது இடையில் மின் தடை ஏட்பட்டுள்ளது. அந்த நேரத்தில ஏற்றப்பட்ட சலசலபில் மணப்பெண்கள் மாறி விட்டனர். நிகிதா, கரிஷ்மாவின் மாப்பிள்ளை கணேஷுடன் அமர்ந்தும், கரிஷ்மா, நிகிதாவின் மாப்பிள்ளை போலாவுடன் அமர்ந்து சடங்குகளைச் செய்தனர். மின்தடையால், புரோகிதரும் இதனை கவனிக்கவில்லை. திருமணமும் இனிதே நிறைவுபெற்றது. 


இரு தம்பதியினரும் அவர்களின் வீடுகளுக்கு சென்றபின்னர் மணமகள்களின் முக்காடை அகற்றியுள்ளனர். முக்காடை அகற்றியதும் மணமகன்களுக்கு  அதிர்ச்சி ஏற்பட்டது. நான் இந்த பெண்ணை பார்க்கவில்லையே... எப்படி மணப்பெண் மாறியது என்று கேட்டு, பெண் வீட்டாருடன் சண்டை போட்டுள்ளனர். மின் தடையால் தான் மணப்பெண்கள் மாறிவிட்டார்கள் என்று மணமகன் வீட்டாருடன் பேசி சமாதான படுத்தியுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியினருக்கு  பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்