Ticker

6/recent/ticker-posts

கல்யாணம் பண்ணா தான் ஜாமீன். கோர்ட்டிலயே தாலி கட்டிய இளைஞர்.

கல்யாணம் பண்ணா தான் ஜாமீன். கோர்ட்டிலயே தாலி கட்டிய இளைஞர். 


ஏமாற்றிய அப்பெண்ணை திருமணம் செய்தால் தான் ஜாமீன் கிடைக்கும் என தீர்பளித்ததால் கோர்ட் வாசலிலேயே தாலி கட்டி திருமணம் செய்யப்பட்டது. இத பாக்கும்போது நாட்டாமை படத்துல "கட்டுறா தாலிய" இந்த டயலாக் ஞாபகம் வருதில்ல. 


புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த அஜித் வயது 22, சத்யா வயது 20 ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லங்க இருவரும் திருமணம் செய்யாமலேயே குழந்தையையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் இளைஞர் தன்னுடைய வேலையே காட்ட ஆரம்பித்துவிட்டார் போல. இந்நிலையில் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



தான் செய்தது தவறு என்று தெரிந்தும் தப்பிக்க வலி தேடி ஜாமீன் கேட்டுள்ளார் அஜித். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர், அப்படி எல்லாம் ஜாமீன் கொடுக்க முடியாது பா..  என்று கூறி  இந்த வழக்கு முழுவதும் தம்பதியினர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், முதலில் திருமணத்தை முறைப்படி நடத்த வேண்டும் என்று கூறியுள்ளர் நீதிபதி. இதையடுத்து சத்யாவை திருமணம் செய்து கொள்ள அஜித்தும் ஒப்புக்கொண்டார்.


பின்னர் இருவரின் திருமணத்தை நடத்தி வைக்க பெண் வழக்கறிஞர் குழுவை நியமித்தார் நீதிபதி . இதன்படி  நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலிலேயே இருவருக்கும் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.



இதன்போது இருவரின் உறவினர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதை அடுத்து திருமணம் செய்து கொண்ட அஜித்தை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்