Ticker

6/recent/ticker-posts

ஏன்டா ஒரு நாயம் தர்மம் வேண்டாமா? உச்சத்தை தொட்டது சைக்கிளின் விலை.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை. 


ஏன்டா ஒரு நாயம் தர்மம் வேண்டாமா? உச்சத்தை தொட்டது சைக்கிளின் விலை. 



கொரோனா பாதிப்பால் பல உலக நாடுகள் பொருளாதார சரிவை எதிர்நோக்கியது. பல மக்களுக்கு  வேலையின்மை  ஏட்பட்டது. 2  வருடங்களுக்கு மேலாக நீடித்த கொரோனா பாதிப்பிலிருந்து இப்போதுதான் எல்லா நாடுகளும் பொருளாதாரத்தை மேம்படுத்தி  வருகின்றனர். அனால் இன்னுமே பல நாடுகளில் கொரோனா பாதிப்பு முடியவில்லை. 


என்னதான் கொரோனா பாதிக்கப்பட்டாலும் பல நாடுகள் தங்களுடைய பொருளாதரத்தை காப்பாற்றி கொண்டனர். அனால் முறையற்ற அணுகுமுறையினால் இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டது.  இன்றும் மீள முடியாத பொருத்தர வீழ்ச்சி மற்றும் கடன் சுமையோடு இருக்கிறது இலங்கை. 


இன்று இலங்கையில் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ளமுடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது, ஒரு புறம் எரிபொருள் இல்லை. இன்று எரிபொருளுக்கு வாகனங்கள் வரிசையில் காத்திருக்கின்றது. 



இந்த நிலமையில் தான் மக்கள் அதட்கான மாற்று வழியாக துவிச்சக்கர வண்டியை நாடி செல்கின்றனர்.  ஆனாலும் நாட்டில் ஏட்பட்டுள்ள அசாதாரண சூழ்நியால் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளிலும் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலைக்கு விட்பனை செய்கின்றார்கள். 


குறிப்பாக சாதாரண துவிச்சக்கர வண்டியின் விலை 60,000 ஆகவும், கியர் பைக்கின் விலை 100 ,000 யும்தாண்டி சென்றுள்ளது. இந்த நிலையில் மக்களிடம் துவிச்சக்கர வண்டிகளின் கேள்வி அதிகரித்தமையாலும் கொள்வனவு அதிகரித்தாலும் சந்தையில் துவிச்சக்கர வண்டிகளின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளது. ஏற்கனவே இருக்குற பிரச்னை போதாதா இப்போ இது வேறயா? னு மக்கள் புலம்பி தீர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்