Ticker

6/recent/ticker-posts

உள்ளாடையை கழட்டினாள் தேர்வு எழுதலாம், மிரட்டிய அதிகாரிகளால் கதறி அழுத நீட் மாணவிகள்.

உள்ளாடையை கழட்டினாள் தேர்வு எழுதலாம், மிரட்டிய அதிகாரிகளால் கதறி அழுத நீட் மாணவிகள்.



இந்திய முழவதும் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேரவேண்டும் என்றால்  நீட் தேர்வு எழுத வேண்டும். அத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் பொறுத்தே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


இந்த ஆண்டும் மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது.  அதுமட்டுமல்ல தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. 497 நகரங்களில் தேர்வுகள் நடந்தது.


கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால் மாணவியின் உள்ளாடைகளை கழற்ற வேண்டும் என தேர்வு மைய அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதோடு, விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது.


இன்ஸ்டியூட் ஒப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 17ஆம் திகதியான நேற்று இடம்பெற்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நீட் தேர்வின் போது முறைகேடுகளை தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது மதியம் 12:30 மணிக்கு வந்துவிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்ட நிலையில், குறிப்பாக பேர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள், கைக்கடிகாரம், வளையல், கமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்தன. 


தேர்வு மைய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியே பரிசோதித்துள்ளனர். அப்போது மாணவிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் சில மாணவிகளின் உள்ளாடையில் உலோக கொக்கி இருந்ததால் மெட்டல் டிடெக்டர் எச்சரிக்கை செய்துள்ளது.  இதனை அடுத்து மாணவிகளின் உள்ளாடைகளின் கொக்கிகளை அகற்றுமாறு கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி உள்ளாடைகள் முக்கியமா இல்லை உங்கள் எதிர்காலம் முக்கியமா என்று மிரட்டியும் உள்ளனர். இதனால் பெருமளவான மாணவிகள் உள்ளாடைகளை கழற்றி வைத்து விட்டே தேர்வு எழுதும் சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாணவிகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகியள்ளனர். இந்த சம்பவம் இந்திய முழுவதும் ஒரு அதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளது. 


இந்த சம்பவத்தை அதிகாரிகள் மறுத்துள்ளனர் எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஒருவர் காவல் துறையிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளதால் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இது போன்ற viral and trending செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC உடன் இணைந்திருங்கள். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்