Ticker

6/recent/ticker-posts

பிரான்சில் வேலை தேடுவோருக்கு செம்ம ஹாப்பி நியூஸ்.. அதிகரித்துள்ள வேலைவாய்ப்பு.

பிரான்சில் வேலை தேடுவோருக்கு செம்ம ஹாப்பி நியூஸ்.. அதிகரித்துள்ள வேலைவாய்ப்பு. 


பிரான்ஸ் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வேலை ராஜினாமா நிமித்தம் அந்த வெற்றிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. 



பிரான்ஸில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 520,000 பேர் தங்கள் வேலையை இராஜினாமா செய்துள்ளனர் எண்டு தகவல்கள் தெரியவருகின்றன. இதன் காரணமாக  புதிதாக வேலை தேடுவோர் அதிக சம்பளத்துடன் அதனை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பணியை இராஜினாமா செய்தவர்களில் 470,000 பேர் நிரந்தர வேலையில் இருந்தவர்கள் ஆகும்.



2008 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 510,000 பேர் தங்கள் வேலையை இராஜினாமா செய்துள்ளனர்.


இது 2008 ஆண்டு வேலை ராஜினாமா செய்தவரிகளின் ஏணிகயை விட இந்த வருடம் வேலையே ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 2 .9  சதவீதமாக அதிகரித்துள்ளது என சமீபத்திய எ ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது. 


இதன் காரணமாக பல நிறுவனங்களில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏட்பட்டுள்ளது.  இதனால் பல நிறுவங்கள் திணறிக்கொண்டிருக்கின்றன. புதிய வேலைகளுக்கு வாய்ப்பை உருவாக்கித் தருவதால், கூடுதலாக பலர் வேலையை இராஜினாமா செய்துள்ளனர்.அத்துடன், புதிதாக ஒரு இடத்தில் வேலைக்கு சேரும்போது பணியாளர்கள் கூடுதல் ஊதியம் கேட்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


ஏற்கனவே பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதால் புதிதாக வேலைக்கு வருவோரின் நிபந்தனைகளுக்கு உற்பட்டு அவர்களுக்கு வேலை வழங்கும் நிமலமைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. 


Work  From  Home



இது மட்டும் அல்ல கடந்த கொரோனா காலப்பகுதியில்  பல நிறுவனங்களும் " work  from  home " வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகம் செய்தனர்.  இதனால் இதனால் எதிர்வரும் நாட்களில் பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் இவ்வாறான நடைமுறைகளை வழங்குமாறு நிபந்தனைகள் வைக்கப்படுவதற்க்கான வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. 


பணியிடங்கள் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி காரணமாக தொழில் வழங்குநருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள போதும் புதிதாக வேலை தேடுவோருக்கு சாதகமான அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்