Ticker

6/recent/ticker-posts

கனடாவில் காணாமல் போன பெண் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... ஆனாலும் சோகத்தில் குடும்பத்தினர்.

கனடாவில் காணாமல் போன பெண் 42  ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... ஆனாலும் சோகத்தில் குடும்பத்தினர். 



கனடா நாட்டின் ஒன்றாரியோவிலுள்ள வேனியர் என்னும் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் Dale Nancy Wyman. இவர் ஜூலை 16, 1980 அன்று, டேல் நான்சி வைமன் தனது கனடா ஒட்டாவா பகுதி வீட்டை விட்டு ஒரு சூட்கேஸுடன் தனது உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, கிரேஹவுண்ட் பேருந்து நிலையத்திற்கு டாக்ஸியில் சென்று மாயமானார்.

 அவள் எங்கு செல்கிறாள் என்று அவள் சொல்லவில்லை, அவளுடைய குடும்பத்திற்கு எங்கே சென்றால் எங்கே தேடுவது என்று ஏதும் தெரியவில்லை.  இதன்பின்னர், குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசாரும் காணாமல் போன நான்சியை தேடி வந்துள்ளனர்.


அவர்கள் அப்பகுதியில் உள்ள பிரேத பரிசோதனை அலுவலகம், மரண வீடுகள் மற்றும் மருத்துவமனைகளை தொடர்பு கொண்டார், ஆனால் பல மாதங்களாக தேடியும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.


 


அப்போது கடைசியாக நான்சி சென்ற டாக்ஸி டிரைவர் குறித்து போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அந்த டாக்ஸியின் ஓட்டுநரை கண்டுபிடித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.



இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம். குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம்... மேலும் படிக்க.

அப்போது டிரைவர் நான்சி எங்கே சென்றார் என்பது தனக்கு தெரியாது என்றும், அவரை நான் பஸ் ஸ்டாண்ட்டில் இறக்கி விட்ட போது, இரண்டு பேருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, நான்சி காணாமல் போய் 40 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர், நான்சியின் தற்போதைய வயதை ஏற்றபடி, ஓவியம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.



இதுவரை அவரது குடும்பத்தினர்கள் நான்சியை தேடுவதை நிறுத்தவில்லை என்றும், நான்சியை அதிகம் மிஸ் செய்வதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.


நான்கு தசாப்தங்களுக்கு பிறகு ஓஹியோவைச்  சேர்ந்த ஒரு பெண் நான்சியின் வீட்டை தொடர்புகொண்டு நீங்கள் தேடும் பெண் ஓஹியோவில் தான் உள்ளார் என்றும் அவர் என் தாயார் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல ஓஹியோவில் தனக்கான குடுமபத்தை அவர் உருவாக்கியுள்ளார் எனவும் சில மாதங்களுக்கு முன்பு தான் நாசி இறந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  42  வருடங்கள் ஆனாலும் நான்சியை தேடுவதை அவளின் குடும்பத்தினர் நிறுத்தவில்லை. 


ஆனாலும் 42  வருடங்களுக்கு பிறகு நான்சி பற்றிய தகவல் கிடைத்தாலும் 

அவர் இறந்த செய்தி கேட்டதும் குடும்பத்தினர் மீண்டும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்